இன்னும் 3 நாள் மட்டுமே…. மகாகும்பமேளாவில் இதுவரை 60 கோடி பேர் புனித நீராடினர்: உபி அரசு தகவல்

2 months ago 10

மகாகும்ப் நகர்: மகா கும்பமேளாவில் இதுவரை இல்லாத வகையில் 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் பிப்.26ம் தேதி மகா சிவராத்திரி அன்று முடிவடைகிறது. அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் வெள்ளம் அலைமோதுகிறது.

இன்னும் 3 நாள் மட்டுமே இருப்பதால் பிரயாக்ராஜ் நகர் முழுவதும் வாகன நெரிசல் மற்றும் மக்கள் கூட்டத்தால் திணறுகிறது. நேற்று வரை 60 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உபி அரசு தெரிவித்துள்ளது. பிப்.26ம் தேதியுடன் இந்த எண்ணிக்கை 65 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் உட்பட 73 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.  மேலும் நேபாளத்தைச் சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். மகாகும்பமேளாவில் அதிகபட்சமாக மவுனி அமாவாசை அன்று கிட்டத்தட்ட 8 கோடி பக்தர்கள் புனித நீராடினர். அதற்கு அடுத்தபடியாக மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பேர் புனித நீராடினர்.

The post இன்னும் 3 நாள் மட்டுமே…. மகாகும்பமேளாவில் இதுவரை 60 கோடி பேர் புனித நீராடினர்: உபி அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article