இனிப்பான சமையலுக்கு மட்டுமல்ல இளமையான சருமத்துக்கும் வெல்லம் நல்லது!

3 months ago 17

சமையல் அறையில் பயன்படுத்தப் படும் வெல்லம் சரும எழில் காக்கும். ஆரோக்கியத்துக்கு உதவும் என்பது பலருக்கு தெரியாது. வெல்லத்தில் சருமம் மற்றும் கேசத்துக்கு அதிசயங்களை செய்யக்கூடிய ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன என்பது உண்மை. வெல்லம் நரைமுடியை கருப்பாக்க உதவுகிறது. மேலும் இது தலைமுடிக்கு மென்மையான தன்மையையும் தருகிறது.சரும ஆரோக்கியத்தில் வெல்லம் அழுக்கு இறந்த சரும செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. எனவே உங்கள் சரும பராமரிப்புக்கான பொருட்களில் வெல்லத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெல்லத்தில் நிறைந்துள்ளதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் பல ஆரோக்கிய தன்மைகளை அளிக்கின்றன. இந்த நன்மைகள் சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கும் உதவுகின்றன.

வெல்லத்தில் உள்ள கிளைகோலிக் அமிலம் இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவுகிறது. அதே நேரத்தில் இதில் உள்ள இரும்புச்சத்து, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. உங்கள் சருமத்துக்கு இயற்கையான பொலிவையும், தலைமுடிக்கு பளபளப்பையும் அளிக்கிறது.வெல்லத்தில் உள்ள கிளைகோஸிக் அமிலம், சருமத்தை புத்துயிர் பெறச் செய்வதுடன், அதன் வனப்புத் தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது.தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சைபழச் சாறுடன் வெல்லம் கலந்து ஒரு சிரப்பை உருவாக்கவும். அதைக் கொண்டு வட்டமாக உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும்.இந்த ஸ்கரப் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பொலிவாகவும் மற்றும் வயதாவதால் உண்டாகும் சுருக்கங்களையும் குறைக்கும். வெல்லத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், முன்கூட்டிய முதுமைக்கு காரணமான பிரிரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன.

உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் வெல்லத்தை தவறாமல் பயன்படுத்துவது, சருமச் சுருக்கங்களை குறைக்க உதவும். மசித்த வாழைப்பழத்துடன் வெல்லம் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து பேஸ் மாஸ்க்கை தயாரிக்கலாம். அதை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊறவிடவும். இந்த மாஸ்க் உங்கள் சருமத்துக்கு ஊட்டமளிக்கும். வயதான அறிகுறிகளைக் குறைக்கும். வெல்லத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பரு மற்றும் பருக்களை குறைக்க உதவுகின்றன. தெளிவான சருமத்துக்கு வழிவகுக்கின்றன. தினமும் ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது அல்லது காலை நேரத்தில் சேர்ப்பது நல்ல பலன்களை அளிக்கும். கூடுதலாக முகப்பருக்கள் உள்ள பகுதிகளில் வீக்கத்தைக் குறைக்கவும், வெடிப்புகளை தடுக்கவும் வெல்லம் மற்றும் மஞ்சள் பேக் பயன்படுத்தலாம்.

வெல்லம் சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. அதன் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகள், சுற்றுச் சூழலில் இருந்து ஈரப்பதத்தை உங்கள் தோலுக்கு இழுக்கின்றன. நீரேற்றம், பேஸ் மாஸ்க், காஸ்மெட்டிக் பனீர் அல்லது ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் உடன் வெல்லத் தூளை சேருங்கள். அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் கழுவுங்கள். இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை மென்மையாகவும், சீராகவும் மாற்றும். பொதுவாக வெள்ளை சர்க்கரையை முற்றிலுமாக குறைத்து காபி, டீ, ஜூஸ் இவைகளில் வெல்லம் சேர்க்க இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்கும். சரும வறட்சிதான் நீரிழிவு நோயின் முதல் அறிகுறி இதனை துவக்கத்திலேயே சரி செய்ய உணவு, அழகு என இரு விதமாகவும் வெல்லத்தைப் பயன்படுத்த ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.
– அ.ப.ஜெயபால்

 

The post இனிப்பான சமையலுக்கு மட்டுமல்ல இளமையான சருமத்துக்கும் வெல்லம் நல்லது! appeared first on Dinakaran.

Read Entire Article