
தற்போது ஜெயம் ரவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 'இனி என்னை ஜெயம் ரவி என யாரும் அழைக்க வேண்டாம், ரவி அல்லது ரவி மோகன் என்றே அழைக்கப்பட விரும்புகிறேன் என தெரிவித்து இருக்கிறார். மேலும் ரவி மோகன் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி இருப்பதாகவும் அவர் அறிவித்து உள்ளார். ரசிகர் மன்றம் இனி அறக்கட்டளையாக மாற்றப்படும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயம் ரவியின் நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' படம் நாளை ரிலீஸ் ஆகிறது.