ஜகர்தா,
இந்தோனேசியாவின் நுசா டெங்கரா மாகாணத்தின் பிளோர்ஸ் தீவில் எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது.
இதனால், அப்பகுதியில் உள்ள கிராமங்களை எரிமலையில் இருந்து வெளிவந்த கரும்புகை சூழ்ந்தது. அதேபோல், எரிமலையில் இருந்து தீக்குழம்பும் வெளிவந்தது.
இந்நிலையில், எரிமலை வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர். அதேவேளை, தொடர் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.