இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி: சிந்து தோல்வி; லட்சயா சென் வெற்றி

2 hours ago 1

ஜகர்த்தா,

இந்தோனேசியாவில் இந்தியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி தொடர் நடந்து வருகிறது.

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின் என்பவருடன் நேற்று விளையாடினார். 37 நிமிடங்கள் நடந்த முதல் சுற்று போட்டியில் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோற்று போட்டியில் இருந்து சிந்து வெளியேறினார்.

அதேவேளையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் லட்சயா சென், ஜப்பானின் தகுமா ஒபயாஷியை 21-9, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 39 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற சென், இன்று நடைபெறும் அடுத்த சுற்று போட்டியில், ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை எதிர்த்து விளையாடுவார்.

Read Entire Article