இந்து மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜ பயன்படுத்துகிறது: சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம்

3 months ago 16

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆர்எஸ்எஸ்-பாஜவின் வெறுப்பு அரசியலை எதிர்த்து கண்டனக் கூட்டம் காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே, மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக தலைவர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கண்டன உரயைாற்றினர்.

‘‘இந்து மதத்தை பாஜ அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறது.ஒரேநாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர முயற்சித்தால் அதை தவிடு பொடியாக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி இன்று கம்பீரமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும்\\” என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுகையில் குறிப்பிட்டனர். இக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், தமிழக காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் துறை தலைவர் சந்திரமோகன், இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ், ஆர்டிஐ பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, இலக்கிய அணி தலைவர் புத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, எம்.ஏ.முத்தழகன், அடையாறு துரை, ஆர்.எஸ்.செந்தில் குமார், சுந்தரமூர்த்தி, யுவராஜ், ஆர்.எம்.தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post இந்து மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜ பயன்படுத்துகிறது: சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article