இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

3 months ago 13

புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Read Entire Article