இந்தியில் ஏன் பேச வேண்டும்? வைரலாகும் நடிகை மீனாவின் வீடியோ!

3 months ago 30

2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது. செப்டம்பர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என பலப் பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022ல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மீனாவுக்கு நைனிகா (13) என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக மீனா திரிஷியம் 2, ப்ரோ டாடி படங்களில் நடித்திருந்தார். தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை மீனாவிடம் ஹிந்தியில் பேசும்படி கேட்கப்பட்டது.

அதற்கு நடிகை மீனா, "இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஐபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது" என்று பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Oh..Hindi??Why did you call me then?South is rocking ..I'm a proud south Indian.-Tamil Actress Meena pic.twitter.com/lTKGFZ0Btb

— We Dravidians (@WeDravidians) October 1, 2024
Read Entire Article