இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

2 months ago 26

டாக்கா,

இந்தியா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

இதில் முதலாவது 20 ஓவர் போட்டி குவாலியரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதியும், 2-வது ஆட்டம் டெல்லியில் 9-ந் தேதியும், 3-வது ஆட்டம் ஐதராபாத்தில் 12-ந் தேதியும் நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்மூல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், லிட்டன் தாஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்மூத் உல்லா, லிட்டன் குமர் தாஸ், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ்,ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

Read Entire Article