
லண்டன்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி 9-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் விலகியுள்ளார். காயம் காரணமாக 3-வது போட்டியை தவறவிட்ட அவர் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
3-வது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட டாமி பியூமாண்ட் எஞ்சிய தொடர் முழுவதும் கேப்டனாக செயல்பட உள்ளார். நாட் ஸ்கைவர்-பிரண்டுக்கு மாற்று வீரராக மாயா பவுச்சியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.