இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனுடன் வந்த அமெரிக்க பயணி - சென்னை விமான நிலையத்தில் கைது

2 months ago 14

சென்னை,

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் என்ற நபர், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்தபோது, அவரது உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள், அதில் சேட்டிலைட் போன் இருப்பதை கண்டறிந்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சேட்டிலைட் போனுக்கு தங்கள் நாட்டில் எந்த தடையும் இல்லை என்பதால் அதை எடுத்து வந்ததாக அவர் விளக்கமளித்தார்.

இருப்பினும் அவரது விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், டேவிட்டின் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து அவர் வைத்திருந்த சேட்டிலைட் போனையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரக அலுவலகத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து இது அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article