இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் சம்பந்தமான வாசிப்பு தமிழ்நாட்டில் அரசு அறிமுகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

2 months ago 8

சென்னை: ஒட்டு மொத்த இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் சம்பந்தமான வாசிப்பை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் பா.ம.க. உறுப்பினர் அருள் (சேலம் மேற்கு), நூலகங்கள், போட்டி தேர்வுகள், சேலத்தில் அறிவு சார் மையம் எழுத்தாளர்களின் புத்தகங்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி பேசுகையில் “சேலம் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 35 நூலகங்கள் முழுமையாக கட்டப்பட்டு வருகிறது.

6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்திலுள்ள புத்தகங்கள் தான் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான, பொருத்தமான புத்தகம். கிட்டத்தட்ட 1958 நூலகங்களுக்கு இதுவரை வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. 108 நூலகங்களுக்கு தரமான வசதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் சம்பந்தமான வாசிப்பு மாநில அரசு கொண்டு வந்திருக்கிறது. கொள்முதலுக்காக 11 ஆயிரம் புத்தகங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் கிட்டத்தட்ட 8,363 புத்தகங்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. டிசம்பர் மாதத்திற்குள்ளாக அவை முழுமையாக கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் சம்பந்தமான வாசிப்பு தமிழ்நாட்டில் அரசு அறிமுகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article