இந்தியாவிலேயே 43% வேலைக்கு போகும் பெண்கள் கொண்டது தமிழ்நாடு : சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!!

12 hours ago 1

டாவோஸ் : இந்தியாவிலேயே தொழிற்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. 2025 உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் இன்வெஸ்ட் இந்தியா பெவிலியனை தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையான உற்பத்தி சக்தியாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கல்வி மற்றும் சம உரிமை ஆகும். மின்சார கார் உற்பத்தியில் இந்தியாவிலேயே 40% தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது.

இரண்டு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தியில் 70% தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே 43% வேலைக்கு போகும் பெண்கள் கொண்டது தமிழ்நாடு. 25% முன்னணி கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா உலகத்திற்கான கொள்கைகளை எழுதத் தொடங்க வேண்டும். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே போட்டி இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.நாம் அனைவரும் இந்தியாவுக்காகதான் உழைக்கிறோம். வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு முதலீடுகள் நழுவிச் சென்றுவிடக் கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இந்தியாவிலேயே 43% வேலைக்கு போகும் பெண்கள் கொண்டது தமிழ்நாடு : சுவிட்சர்லாந்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்!! appeared first on Dinakaran.

Read Entire Article