
டெல்லி,
பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் 3 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்தது.
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எத்தனை விமானங்களை நாம் இழந்தோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதேபோல், கடந்த சில நாட்களுக்குமுன் கர்நாடகாவில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் சிறிய அளவிலான போரை மோற்கொள்கிறோம்' என்றார். மேலும், மத்திய அரசையும் அவர் விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், அக்கட்சின் தேசிய செய்தித்தொடர்பாளருமான கவுரவ் பாட்யா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ராகுல் காந்தியின் அறுவுத்தலில் ஆபரேஷன் சிந்தூரை சிறிய போர் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். காங்கிரசின் குணாதிசயம் மற்றும் கவனக்குறைவான அணுகுமுறையை பார்க்கும்போது இந்தியாவிற்கு ராகுல் காந்தி துரோகம் செய்கிறார் என்று தெரிகிறது' என்றார்.