சென்னை: சென்னை ஐசிஎப் ரயில் தொழிற்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் எதிர்காலத்தை இன்றுள்ள நமது வலிமையான இளைஞர் சக்தி நிர்மாணிக்கும்.
வடக்கே காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலம் முதல் தெற்கே பாம்பன் செங்குத்து ரயில்வே தூக்கு மேம்பாலம் வரை ரயில்வேயில் உலகத்தரத்திலான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நமது நாட்டிலும் புல்லட் விரைவு ரயில் பயணம் சாத்தியமாக உள்ளது. மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் பாதை விரைவாக தயாராகி வருகிறது. இவ்வாறு அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த வேலைவாய்ப்பு திருவிழாவில் தெற்கு ரயில்வே, ஐசிஎப், பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 251 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் எல்.முருகன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ், முதன்மை தலைமை பணியாளர் அலுவலர் மோகன்ராஜா, முதன்மை தலைமை இயந்திர பொறியாளர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
The post இந்தியாவின் எதிர்காலத்தை வலிமையான இளைஞர் சக்தி நிர்மாணிக்கும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.