சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுவதால் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நமது நாட்டின் எல்லைப் பகுதியில் பெரும் போர் நடந்து வருகிறது.
இதனால் வரும் 16ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது. இன்னொரு நாளில் இந்த விழா நடைபெறும். நமது தாய்நாட்டிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வீரர்கள் உடனும் நாம் கைகோர்த்து நிற்க வேண்டிய தருணம் இது.
இது முழுக்க முழுக்க அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டிய நேரம். விழா கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல. ஆகவே விழாவுக்கான தேதி பிறகு முடிவு செய்யப்படும். இப்போது எங்களது எண்ணம் எல்லாமே இந்த நாட்டுக்கான வீரர்கள், வீர மங்கைகள் ஆகியோருக்கு துணை நிற்பதிலேயே உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் கடமையும் இதுவாகும். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
The post இந்தியா – பாக். போர் எதிரொலி கமல்ஹாசன் திடீர் முடிவு appeared first on Dinakaran.