இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை

8 hours ago 2

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் 4 சமூக வலைதள பதிவுகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. மேலும், இந்தியா - ஈரான் நல்லுறவை சீர்குலைக்க இந்த பதிவுகள் போலியாக வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகள் வெளியான சமூக வலைதளங்கள் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வமானவை அல்ல. அவற்றுக்கும் ஈரான் அரசுக்கும் தொடர்பில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் தூதரகம் வெளியிட்ட 4 போலி சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில், அமெரிக்க விமானம் இந்திய வான் பரப்பில் பறந்து செல்வதற்கு அனுமதி அளித்ததால், சபாஹர் துறைமுக ஒப்பந்தத்தை ஈரான் மறுபரிசீலனை செய்து வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போலி செய்தி, போலி எக்ஸ் வலைதள கணக்கு என்று ஈரான் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இந்த பதிவு பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நல்உறவை சீர்குலைக்க சில சமூகவிரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுடனான வர்த்தகம், ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் பல ஆண்டுகளாக வலுவாக உள்ளது. இது தொடர்ந்து நீடிக்கும் என்று ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article