இந்தியா, சீனா பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை

10 hours ago 2

லவோஸ்,

வியட்நாம் நாட்டின் தலைநகர் லவோஸ் நகரில் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் மாநாட்டிற்கு இடையே இந்தியா, சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை மந்திரி டாங் ஜன் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பும் இடையேயான எல்லைப்பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய படையினர், சீனப்படையினர் இடையே மோதல் நடைபெற்றது. இந்த மோதலால் இரு தரப்பிலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்பட்டது. தற்போது லடாக் எல்லையில் இரு தரப்பும் வழங்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article