இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் முதல் டெஸ்ட் போட்டி: இன்று தொடக்கம்

1 day ago 5

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்சுக்கு எதிராக 2 டெஸ்ட் (4 நாட்கள்) போட்டிகளிலும், இந்திய அணிக்கெதிராக ஒரு போட்டியிலும் விளையாடுகிறது. இந்த தொடர் இன்று தொடங்க உள்ளது.

அதன்படி இந்தியா ஏ -இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேன்டர்பரியில் இன்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கருண் நாயர், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் இந்த போட்டியில் விளையாட உள்ளதால் இது எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.

Read Entire Article