இந்தியா உடனான நட்பு இஸ்ரேலுக்கு கிடைத்த வரம்.. ஐ.நா. மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு புகழாரம்

1 hour ago 4
இந்தியா உடனான நட்பு, இஸ்ரேலுக்கு கிடைத்த வரம் என அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு  தெரிவித்துள்ளார். ஐ.நா. மாநாட்டில் பேசிய அவர், வரம் என்ற தலைப்பில் ஒரு வரைப்படத்தையும், சாபம் என்ற தலைப்பில் மற்றொரு வரைப்படத்தையும் மேடையில் காட்டினார். இந்தியா, சவுதி, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் வரமாகவும், ஈரான், ஈராக், சிரியா, ஏமன் ஆகிய நாடுகள் சாபமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதே சமயம், அவ்விரு வரைப்படங்களிலும் பாலஸ்தீனம் இடம்பெறாமல் இருந்தது, அவர்களின் தனி நாடு கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரிக்காது என்பதை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்திருந்தது. பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளபோதும், பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து பணியாற்றிவருகின்றன.
Read Entire Article