இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

3 months ago 25
இந்தியா-ஆசியான் நாடுகளிடையே நட்பை பலப்படுத்த பத்து அம்ச திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இரண்டு நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் வியான்டியானில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார் தென் சீனக்கடல் பகுதியில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், சர்வதேச சட்டங்களுக்குட்பட்ட பிரகடனத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டுமென ஆசியான் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, கடல் பாதுகாப்பு, கப்பல்கள் சுதந்திரமாக செல்வதற்கான வாய்ப்பு உள்பட சட்டரீதியாக கடல்களைப் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் ஆசியான் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Read Entire Article