சீர்காழி, ஜன.18: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசித்து வரும் சீதா-மணிவண்ணன். இவர்களது மகள் சுபானு. நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி கல்வி பயின்று வருகிறார். இவர் யோகா போட்டியில் சர்வதேச அளவில் பல்வேறு தங்கப் பதக்கங்கள் மெடல்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த கேலோ இந்தியா உமன் லீக் யோகா போட்டியில் குழு பிரிவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவி சுபானு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்ற சுபானுவை பல்வேறு அரசியல் தலைவர்கள் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
The post இந்தியா அளவில் நடந்த யோகா போட்டி சீர்காழி மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.