"இந்தியர்கள் பாதுகாப்பாக இருங்கள்..." - இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை

3 months ago 33

டெல் அவிவ்,

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளால் (https://www.oref.org.il/eng) அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் இருங்கள், தேவையற்ற பயணங்களை நாட்டிற்குள் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும். தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24 x 7 ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளவும்:

தொலைபேசி எண்கள்:

A. +972-547520711

B. +972-543278392

மின்னஞ்சல்: [email protected]

இந்தியப் பிரஜைகள் யாராவது தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், தயவுசெய்து இதற்கான இணைப்பில் (https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA) பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




 


Read Entire Article