டெல்லி: அமெரிக்காவில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு விடுதியில் அடைக்கப்பட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு கடத்துகிறோம் என்ற பெயரில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சி கேள்வி அலுப்பியுள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் ஆவணங்கள் இன்றி குடியிருக்கும் இந்தியர்களை தொடர்ந்து நாடு கடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களில் 322 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானங்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுளளனர்.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பனாமாவில் ஒரு விடுதியில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தங்களை மீட்குமாறு கதறும் காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளன. இந்தியர்கள் பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்டதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நாடு கடத்துகிறோம் என்ற பெயரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு கடத்தப்படும் இந்தியர்களை கை விலங்கிட்டு அனுப்புவது மனித தன்மையற்ற செயல் என வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது பனாமாவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்தியர்களை பனாமாவுக்கு அனுப்பி உள்ளது குறித்து இந்திய வெளியுறவுத்துறை என்ன விளக்கம் அளிக்க உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
The post இந்தியர்களை பனாமாவுக்கு நாடு கடத்திய டிரம்ப்: என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.