சென்னை: இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரைக்கு நேரில் வந்து விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதனால், மெரினா கடற்கரை பகுதி மக்கள் வெள்ளத்தில் அலைமோதியது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர். இந்த ஏர் ஷோவை முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி.சிங், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் நேரில் கண்டனர்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறிருப்பதாவது: சூப்பர் ஸ்டார்களின் கண்கவர் நிகழ்ச்சியை சென்னை ரசித்துள்ளது-நமது இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
The post இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.