இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட்

4 hours ago 3

பணி: சயின்டிஸ்ட்/இன்ஜினியர்- ‘‘எஸ்சி’’

i) சிவில்: 18 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) எலக்ட்ரிக்கல்: 10 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங்: 9 இடங்கள். தகுதி: ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேசன் பாடத்தை முக்கிய பாடமாகக் கொண்டு ஏதாவதொரு பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 65% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
iv) ஆர்க்கிடெக்சர்: 1 இடம். தகுதி: ஆர்க்க்ிடெக்சர் பாடத்தில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.ஆர்க் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) சிவில் (சுயேச்சை நிர்வாக பிரிவு): 1 இடம். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
சம்பளம்: ரூ.56,100. வயது: 14.07.2025 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.750/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளும் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு முழு விண்ணப்ப கட்டணம் திருப்பித் தரப்படும்.www.isro.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2025.

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article