மதுரை, மார்ச் 19: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ அக்னிவீர் படைப்பிரிவிற்கான ஆட்சேர்ப்பு பணிகள் துவங்கியுள்ளன. கோயம்புத்தூர் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் இந்த சேர்க்கைக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மார்ச் 12 முதல் ஏப்.10க்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அக்னிவீர் பொது பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர்- கிடங்கு மேலாளர், அக்னிவீர் தொழிலாளி (10 மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி), பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒரு விண்ணப்பதாரர் இரண்டு பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம். 1.6 கி.மீ தூரத்தை 6.15 நிமிடத்திற்குள் கடக்க வேண்டும். என்சிசி, ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத் தேர்வும், அதன் பின்னர் ஆட்சேர்ப்பு முகாம் நடவடிக்கையும் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படையானது என்றும், திறமையை அடிப்படையாக கொண்டது என்றும், மோசடி செய்யும் ஏஜென்ட்டுகளிடம் ஏமாறாதீர்கள் என்றும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.