இந்திய முன்னாள் வீரர் மீது பி.சி.சி.ஐ.-யிடம் ரோகித் சர்மா புகார்.. என்ன நடந்தது..?

1 day ago 1

மும்பை,

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் பேட்ஸ்மேனாக மட்டுமின்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பிய ரோகித் சர்மா தோல்விக்கு முக்கிய காரனமானார். இதனால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார். மேலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும் அவர் பல விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனிடையே உள்ளூர் போட்டிகளில் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது.

இதனையடுத்து ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையில் மும்பை அணி தரப்பில் களமிறங்கினார். ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிரான மும்பையின் ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா 2 இன்னிங்ஸ்களில் முறையே 3,28 ரன்கள் அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதனால் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கவாஸ்கர் மீண்டும் விமர்சித்தார்.

இப்படி அடுக்கடுக்கான விமர்சனங்களால் கோபமடைந்த ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ.) புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னை தேவையில்லாமல் விமர்சிப்பதாகவும், குறிப்பாக ரஞ்சி கோப்பையில் தனது ஈடுபாட்டை குறைசொல்வது நியாயமற்றது என்றும் இத்தகைய விமர்சனங்கள் தனக்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும் ரோகித் சர்மா, பி.சி.சி.ஐ. -யிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article