மும்பை,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் காய்ச்சலால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றார்.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேரில் மிச்செல் 82 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்தை விட 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக கில் 90 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
முன்னதாக இந்த இன்னிங்சில் அஜாஸ் படேல் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து மும்பை மைதானத்தில் இதுவரை 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வெளிநாட்டு வீரர் என்ற மாபெரும் சாதனையை அஜாஸ் படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. இயன் போத்தம் - 11 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம்
2. அஜாஸ் படேல் - 19 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம்
3. ரிச்சி பெனாட் - 18 விக்கெட்டுகள் - ஈடன் கார்டன் மைதானம்
4. கோர்ட்னி வால்ஷ் - 17 விக்கெட்டுகள் - வான்கடே மைதானம்