இந்திய பெண்ணை மணந்த இலங்கை நபரை நாடு கடத்த ஐகோர்ட் தடை

1 month ago 16

மதுரை: இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன்.

ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து,எனது விசா காலத்தை நீ்ட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article