இந்திய பாதிரியார் கார்டினலாக நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து

2 months ago 14

புதுடெல்லி: புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக இந்திய பாதிரியார் ஜேக்கப் நியமிக்கப்பட்டது இந்தியாவுக்கு பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பிரான்சிஸ் போற்றப்படுகிறார். இவருக்கு ஆலோசனை கூறுவதிலும், கத்தோலிக்க சமயம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் கார்டினல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜேக்கப் கூவாக்காட் புனித கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பதிவில், “ போப் பிரான்சிஸ் அவர்களால் புனித கத்தோலிக்க திருச்சபை கார்டினலாக இந்தியாவின் ஜார்ஜ் ஜேக்கப் கூவாக்காட் நியமிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஜார்ஜ் கார்டினல் கூவாக்காட் இயேசு கிறிஸ்துவின் தீவிர சீடராக மனிதகுல சேவைக்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

The post இந்திய பாதிரியார் கார்டினலாக நியமனம்: பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article