
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.
'ஏ' கிரேடில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், அதிரடி பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ஷபாலி வர்மா 'பி' கிரேடிலும், ஸ்ரேயங்கா பட்டீல், திதாஸ் சாது, அருந்ததி ரெட்டி, அமன்ஜோத் கவுர், உமா சேத்ரி, யாஸ்திகா பாட்டியா, ராதா யாதவ், சினே ராணா, பூஜா வஸ்ட்ராகர் ஆகியோர் சி பிரிவிலும் உள்ளனர்.