இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல் - மேகா தம்பதிக்கு ஆண் குழந்தை

13 hours ago 1

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான அக்சர் படேல், தனது நீண்ட கால காதலியான மேகாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் வதோதராவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் அக்சர் படேல் - மேகா தம்பதியினருக்கு கடந்த 19-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பை 5 நாட்கள் கழித்து அக்சர் படேல் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். அந்த பதிவில் தனது குழந்தைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு 'ஹக்ஷ் படேல்' என பெயரிட்டுள்ளார். 

Read Entire Article