இந்திய அணியின் விக்கெட் கீப்பராக என்னுடைய முதல் தேர்வு இவர்தான் - கெவின் பீட்டர்சன்

3 hours ago 1

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 5 வெற்றிகள் மற்றும் மழையால் ஒரு ஆட்டம் ரத்தான நிலையில் 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். நடப்பு தொடரில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 364 ரன்கள் குவித்துள்ளார்.

முன்னதாக கடந்த சீசனில் மோசமான பார்ம் காரணமாக கே.எல்.ராகுல் பெரும் விமர்சனங்களை எதிர் கொண்டார். தற்போது அந்த விமர்சனங்களுக்கு மீண்டும் பார்முக்கு திரும்பி பதிலடி கொடுத்து வருகிறார். ஐ.பி.எல். மட்டுமின்றி அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது இந்திய டி20 அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் முனைப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல். ராகுல் இந்திய டி20 அணியில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய தகுதியானவர் என்று கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய டி20 அணியில் நான் கே.எல். ராகுலை 4-வது இடத்தில் விளையாட வைப்பேன். இந்தியாவிடம் நிறைய தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதுபோக டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய சூர்யகுமார் யாதவும் உள்ளார். ஆனால் கே.எல். ராகுல் இப்போது கிரிக்கெட் விளையாடும் விதத்தைப் பார்த்தால், அவர்தான் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பராக எனது முதல் தேர்வாக இருப்பார்" என்று கூறினார்.

Read Entire Article