மதுரை: இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது.நாட்டை துண்டிக்க பாஜக துடிக்கிறது என சீமான் கூறியுள்ளார். நாதக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: மும்மொழி கொள்கையில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு. இந்த நாட்டை பாஜ துண்டிக்க துடிக்கிறது. இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வழியாக மாநிலங்கள் எதற்காக பிரிக்கப்பட்டது? இந்தி மொழி பயில வேண்டும் என்றால் அதற்கான சிறப்பு காரணங்கள் என்ன? இந்திய மொழி இந்தி என எந்த சாசனத்தில் உள்ளது.
இந்திய மொழி இந்தி என எந்த பைத்தியக்காரன் சொன்னது? இரண்டு, மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய இந்தி மொழியை திணிக்க நினைப்பது தவறு. தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். இந்தியா வளர்ந்த நாடா? இன்னும் மக்கள் பசி, பட்டினியுடன் வாழ்கின்றனர். ஆங்கிலம் படிப்பது தான் அறிவு என பொதுப்புத்தி உருவாகி உள்ளது. இந்தி படித்தால் அடுத்தகட்ட வளர்ச்சி என்றால், வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வருகிறார்கள். இலங்கை, வங்கதேசத்தில் நடந்தது தான் இந்தியாவிலும் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தி மொழியை திணிப்பது தேவையற்றது; நாட்டை துண்டிக்க பாஜ துடிக்கிறது: சீமான் கண்டனம் appeared first on Dinakaran.