“இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால்...” - திருமாவளவன் பேச்சு

16 hours ago 2

விழுப்புரம்: செஞ்சி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று மாலை செஞ்சி தமிழ்ச்சங்கம் 13-ம் ஆண்டு தமிழ்ச் சங்கம் தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று பேசியது:

“வடமாநிலத்தவர் தங்களின் தாய்மொழியான இந்தியை சரளமாக வெட்கப்படாமல் பேசுகிறார்கள். மண்ணை மறக்கக் கூடாது கூடவே தாய் மொழியை மறக்கவே கூடாது. நாம்தான் தாய் மொழியை விட அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதை பெரிதாக எண்ணுகிறோம். தமிழ் பேசினால் அது தாழ்வு என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆங்கிலம் தெரியாமல் இருப்பதை தாழ்வாக எண்ணுவது தமிழர்கள் மட்டுமே. இந்த உளவியலை நாம் பெற்றுள்ளோம்.

Read Entire Article