வரி ஏய்ப்பு புகார்: ராமலிங்கத்தின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

11 hours ago 3


ஈரோடு: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரின் வீடு மற்றும் கட்டுமான நிறுவனத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் செட்டிபாளையத்தில் செயல்பட்டுவரும் ஆர்.சி.சி.எல் என்ற கட்டுமான நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து நிறுவனத்தில் 3வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவனத்தின் உரிமையாளரான ராமலிங்கம் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ஆவார்.

ஈரோடு செட்டிபாளையத்தில் உள்ள ஆர்.சி.சி.எல் நிறுவன அலுவலகம் மட்டுமல்லாது ராமலிங்கத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அம்மாபேட்டையில் இயங்கிவரும் ராமலிங்கத்திற்கு தொடர்புடைய மரவள்ளிக்கிழங்கு மாலையிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அத்துடன் ரகுபதி நாயக்கன் பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் செல்வ சுந்தரம் என்பவரின் வீடு, முள்ளம் பரப்பில் செயல்பட்டு வரும் ஆர்.பி.பி. நிறுவனத்தின் அலுவலகம் என ஈரோட்டில் 4 இடங்களில் வருமானவரிதுறை சோதனை நடைபெற்று வருகிறது.

The post வரி ஏய்ப்பு புகார்: ராமலிங்கத்தின் வீடு, அலுவலகங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article