இந்த வார விசேஷங்கள்: 4-3-2025 முதல் 10-3-2025 வரை

2 hours ago 1

4-ந் தேதி (செவ்வாய்)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் பவனி.

* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம், இரவு மகிசாசூர சம்ஹார லீலை.

* சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

* சமநோக்கு நாள்.

5-ந் தேதி (புதன்)

* கார்த்திகை விரதம்.

* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருவிழா தொடக்கம்.

* மதுரை கூடலழகர், கள்ளர் திருக்கோலம்

* வேதாரண்யம், விருத்தாச்சலம், திருவெண்காடு, திருத்தணி தலங்களில் சிவபெருமான் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (வியாழன்)

* மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம்

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் மர தோளுக்கினியானில் புறப்பாடு.

* குடந்தை ஆதிகும்பேசுவரர் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.

* மேல்நோக்கு நாள்.

7-ந் தேதி (வெள்ளி)

* காங்கேயம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி.

* காரமடை அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி.

* நத்தம் மாரியம்மன் பால் காவடி உற்சவம்.

* கோவை கோணியம்மன் தெப்ப உற்சவம்.

* சமநோக்கு நாள்.

8-ந் தேதி (சனி)

* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்திலும், இரவு அம்பாள் இந்திர வாகனத்திலும் பவனி.

* பெருவயல் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி.

* குடந்தை சக்கரபாணி, அனுமன் வாகனத்தில் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

9-ந் தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்டசேவை.

* மதுரை கூடலழகர் காலையில் ஏணிக் கிருஷ்ண அலங்காரம், இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க சேவை.

* சமநோக்கு நாள்.

10-ந் தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.

* சர்வ ஏகாதசி.

* திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளி சப்பரத்தில் பவனி

* திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல்.

* மேல்நோக்கு நாள்.

Read Entire Article