இந்த பையனுக்கு 600 ரன்கள் அதிகம் - இந்திய கேப்டன் சுப்மன் கில்லை சீண்டிய டக்கட்.. வீடியோ வைரல்

6 hours ago 1

லண்டன்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து வீரர்கள் பல தருணங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் மாறி மாறி ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் இந்த போட்டி மிகுந்த சுவாரசியத்துக்கு மத்தியில் முடிவடைந்துள்ளது.

இதில் இந்திய அணியின் 2-வது இன்னிங்சின்போது பேட்டிங் செய்த கேப்டன் சுப்மன் கில்லை, இங்கிலாந்து வீரர் பென் டக்கட் ஸ்லெட்ஜிங் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பென் டக்கட், "இந்த தொடரில் 600 ரன்கள் அடித்ததே அவருக்கு போதும். இந்த பையனுக்கு 600 ரன்கள் எல்லாம் அதிகம்" என்று விமர்சித்தார். இது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வைராலாகி வருகிறது. 

"600 runs and he is done for the series." #BenDuckett throws some cheeky comments while bowling, will #ShubmanGill silence him with a strong statement by tour's end? Will #TeamIndia seize control on Day 5 and take a 2-1 lead in this thrilling Test series? #ENGvINDpic.twitter.com/xNI6BDO8bz

— Star Sports (@StarSportsIndia) July 13, 2025
Read Entire Article