இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயன் படங்கள்

1 day ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் எதிர்நீச்சல், ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் அவரது படங்களை தற்போது காண்போம்.

எஸ்கே 23

சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

எஸ்கே 24

அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான டான் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

எஸ்கே 25

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யா நடிக்க இருந்தபோது இப்படத்திற்கு புறநானூறு என தலைப்பு வைத்திருந்தநிலையில், தற்போது இப்படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.25 எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அயலான் 2

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். .'அயலான்' படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும் என்று ஏற்கனவே சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு

நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்யின் தி கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article