
கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவில் இணையவுள்ள கமல்ஹாசன் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கமல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆஸ்கர் அகாதெமியில் இணைவதை கவுரவமாக கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கானது அல்ல, இந்திய சினிமா துறைக்கும் என்னைச் செதுக்கிய கணக்கில்லா கதை சொல்லிகளுக்குமானது. இந்திய சினிமா உலகிற்கு நிறைய தரவுள்ளது. என்னுடன் தேர்வான பிற கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.