
ரோம்,
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கின்வென் ஜெங் (சீனா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட கின்வென் ஜெங் 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
கின்வென் ஜெங் அரையிறுதியில் கோகோ காப் உடன் மோத உள்ளார். அதிர்ச்சி தோல்வி கண்ட சபலென்கா காலிறுதி சுற்றோடு நடையை கட்டினார்.