இடைத்தேர்தல் நடைபெறும் சென்னப்பட்டணாவில் யார் போட்டி? ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பதில்

1 month ago 5

ஹாசன்: சென்னப்பட்டணா பேரவை தொகுதியின் இடைத்தேர்தலில் என்டிஏ வேட்பாளர் போட்டியிடுவார். இது தொடர்பாக, டெல்லியில் பாஜ தலைவர்களுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார். ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவின் ஹொலேநரசிபுரா தாலுகாவின் பீதரக்கா கிராமத்தில் நேற்று குழல் கோபாலகிருஷ்ணன் கோயிலை ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி திறந்துவைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: சென்னப்பட்டணாவில் டி.கே.சிவகுமார் வேட்பாளரானால் நானும் வேட்பாளராக வேண்டும் இல்லையா? இதனுடன், இன்னும் பலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இடைத்தேர்தலில் என்டிஏ வேட்பாளர் போட்டியிடுவார். இது தொடர்பாக, டெல்லியில் பாஜ தலைவர்களுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் இறுதி செய்யப்படும். ஹூப்பள்ளி கலவர வழக்கில் சில தேசிய புலனாய்வு அமைப்பின் எல்லையில் வழக்குகளும் உள்ளது அதையும் திரும்ப பெற முடியாது. அப்பாவிகளாக இருந்தால் வாபஸ் பெற எங்களின் ஆட்சேபனை இல்லை. சமூக விரோத பின்னணி உள்ளவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மகா குற்றமாகும்.

அரசு என்னென்ன செய்கிறதோ பார்க்கலாம். ரூ.500 கோடியை கட்டவைத்து கொண்டு தேவகிரியில் சுரங்க தொழிலுக்கு குதுரேமுகா இரும்பு மற்றும் கனிம நிறுவனத்திற்கு அரசே அனுமதி அளித்துள்ளது. கனிமத்தை உற்பத்தி செய்த பிறகு வனப்பகுதியாக்க ரூ.190 கோடி கட்டி வைத்து கொண்டுள்ளனர். இதெல்லாம் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர்கண்ட்ரேவுக்கு தெரிவில்லையா? சுரங்க தொழிலை எங்கு தடை செய்துள்ளார். அனைத்து சுரங்கத்திற்கும் அனுமதி கொடுத்து வரவில்லையா, சுற்றுச்சூழல் பாதுகாத்துள்ளார்களா என கேள்வி எழுப்பிய அவர், என் மீதுள்ள தனிப்பட்ட விரோதத்திற்காக நூற்றுக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்து வருகிறார்கள் அவ்வளது தான் என்றார்.

The post இடைத்தேர்தல் நடைபெறும் சென்னப்பட்டணாவில் யார் போட்டி? ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பதில் appeared first on Dinakaran.

Read Entire Article