இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் அன்புமணி பேச்சு

2 months ago 10

சென்னை: இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் மாநிலங்களவையில் அன்புமணி பேசினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி பேசியதாவது: மக்களை பாதிக்கக் கூடிய 3 முக்கியப் பிரச்சினைகள குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். முதலாவது, இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருப்பது, 2வது கிரீமிலேயர், 3வது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.

இதில் காலம் காலமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக கிரிமிலேயர் என்ற தத்துவமும் உள்ளது. பொதுப் பிரிவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இதே பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீண்டும் பாதிக்கப்படுகிறார்கள். பட்டியலினத்தவருக்கோ, பழங்குடியினருக்கோ கிரிமிலேயர் இல்லை, அவ்வாறு இருக்கும்போது ஓ.பி.சி.க்கு மட்டும் ஏன் கிரிமிலேயர்.

ஒன்றிய, மாநில அரசுகள் பழைய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், 95 ஆண்டுகளுக்கு முன் 1931ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில் நிகர்நோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அனைத்து வகையான இடஒதுக்கீடுகளும் சாதியின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் ஏன் அதை செய்யக்கூடாது? தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு மூலக்காரணம் கச்சத்தீவு தான் என்பதால், அதை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: மாநிலங்களவையில் அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article