இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : வீரர்களை இறுதி செய்வதில் பிசிசிஐ தீவிரம்

2 weeks ago 4

மும்பை,

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அத்துடன் சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்களை இறுதி செய்வதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது .மே மாதம் 2வது வாரத்திற்குள் இந்திய அணி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாய் சுதர்சன் மாற்று வீரராக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . படிதார் , கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Read Entire Article