இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

2 months ago 12

டிரினிடாட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மையர் இடம் பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்;

ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், ஷர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

ஒருநாள் தொடருக்கான அட்டவணை விவரம்;

முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 31 - ஆண்டிகுவா

2வது ஒருநாள் போட்டி - நவம்பர் 02 - ஆண்டிகுவா

3வது ஒருநாள் போட்டி - நவம்பர் 06 - பார்படாஸ்


The West Indies have named their 15-player squad for their upcoming ODI assignment against England.

More from #WIvENG https://t.co/O6zDtxAS9n

— ICC (@ICC) October 30, 2024

Read Entire Article