
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்கு பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணியினர் மற்றும் புதிய கேப்டன் வருகிற 24-ந்தேதி தேர்வு செய்யப்படலாம் என தேர்வு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.