''இ.பி.எஸ். பொய்களை கூறுவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அழகல்ல'' - முதலமைச்சர் பேச்சு

4 weeks ago 6
ஆட்சி மீது குற்றஞ்சாட்ட எதுவும் கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை கூறி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் 951 கோடி ரூபாய் செலவிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 133 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய முதலமைச்சர், ஈரோடு மாவட்டத்தில் விரைவில் ஐ.டி. பூங்கா உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் நிதிக்கு காத்திருக்காமல் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதால் மக்களின் ஆதரவை பொறுக்க முடியாமல் இட்டுக்கட்டி கற்பனையான குற்றச்சாட்டை இபிஎஸ் முன்வைப்பதாக கூறினார்.
Read Entire Article