ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் பயிற்சி பெற்று திரும்பிய பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி

3 weeks ago 6

சென்னை,

தமிழ்நாட்டு மாணவர்கள் உயர்கல்வியில் உலக அளவில் முன்னேறவும், உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் நிலையை தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும் சாதாரண ஏழை, எளிய மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு உருவாக்கவும் 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நான் முதல்வன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மாநிலத்திலுள்ள பீனிக்ஸ் அகாடெமியில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் தொழிற்சார் மற்றும் மதிப்பீட்டு பயிற்சி பெற்று திரும்பிய 15 பேராசிரியர்களுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி சான்றிதழை துணை முதல்-அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Read Entire Article