ஆஸ்திரேலிய பத்திரிகையாளரின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த பும்ரா.. என்ன நடந்தது...?

5 hours ago 2

பெர்த்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்படுகிறார்.

முன்னதாக நேற்று இரு அணிகளின் கேப்டகளும் ஒன்றாக இணைந்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். அதன்பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் ஆஸ்திரேலியா பத்திரிகையாளர் ஒருவர், ஒரு மித வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியை வழிநடத்துவது எப்படி இருக்கிறது? என்று பும்ராவை கிண்டலடிக்கும் வகையில் கேள்வியை எழுப்பினார்.

அதற்கு அசராத பும்ரா, "என்னால் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய்ய முடியும். குறைந்தபட்சம் என்னை வேகப்பந்து வீச்சாளர் கேப்டன் என்றாவது அழைக்கலாம்" என்று பதிலடி கொடுத்தார்.

Read Entire Article